வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்தும் கண்காட்சி - 2025 இன்று (25.02.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு F.C . சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாணப் பணிப்பாளர் (கிராம அபிவிருத்தி திணைக்களம் வடமாகாணம் ) திருமதி.பா.கஜானி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி. நிருபராஜ் லாகினி அவர்களும், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் திரு.பொன்னையா குகதாசன் அவர்களும், சாவகச்சேரி ஒருங்கிணைப்பு தலைவரின் இணைப்பாளர் திரு. காராளசிங்கம் பிரகாஸ் அவர்களும், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி S .சுனேத்திரா அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இவ் நிகழ்வில் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் போன்ற பிரிவுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
WhatsApp Image 2026 02 25 at 10.41.32  WhatsApp Image 2026 02 25 at 10.41.39 WhatsApp Image 2026 02 25 at 10.41.42 1 

News & Events

01
ඔක්2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
සැප්2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top