யாழ் மாவட்ட செயலகம் மற்றும் தென்மராட்சி பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை இன்றைய தினம் 04.11.2025 ஆந் திகதி மு.ப 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.மேற்படி நிகழ்வானது தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் , தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய திரு.கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாவட்டச் செயலர் திரு.மருதலிங்கம் பிரதீபன்,சாவகச்சேரி நகர சபை தவிசாளர் ,சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர்,சாவகச்சேரி நகர சபை செயலாளர் , மேலதிக மாவட்ட செயலர்- நிர்வாகம் திரு. க. சிவகரன்,யாழ் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.செ.கிருபாகரன், வட மாகாண போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் மற்றும் பிரதி பதிவாளர் நாயகம் - வடக்கு வலயம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இன்றைய தினம் இடம்பெற்ற நடமாடும் சேவையில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும் 85 பொதுமக்களுக்கான காணி உறுமய பூரண அளிப்பு பத்திரம் வழங்கிவைக்கப்பட்டதுடன் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் 50 பொதுமக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களும் பூர்த்தி செய்யப்பட்டன.மேற்படி நடமாடும் சேவையில் 03 காலம் கடந்த பதிவுத்திருமணங்கள் நடாத்திவைக்கப்பட்டன.இன்றைய தினம் இடம்பெற்ற சேவையில் பொலிஸ் சேவை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம்,மோட்டார் போக்குவரத்து திணைக்களம் -வடக்கு மாகாணம்,ஓய்வூதிய சேவை, மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவின் சேவைகள், காணிக் கிளையின் சேவைகள், சமூக சேவைக் கிளையின் சேவைகள் , மருத்துவ முகாம், கண்ணாடி வழங்கல், கண் பரிசோதனை , பிரதேச சபையின் சேவைகள், நகர சபையின் சேவைகள், திறன் அபிவிருத்தி பிரிவின் தொழில் வழிகாட்டல்கள் , தேசிய அடையாள அட்டை வழங்கல் ஆகிய சேவைகள் வழங்கி வைக்கப்பட்டன .இவ்வகையில் தென்மராட்சி பிரதேச செயலக நடமாடும் சேவையில் 2041 பயனாளிகள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்குரிய 3421 சேவைகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேற்படி நடமாடும் சேவையில் சேவை நாடி வருகை தந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட சேவை பெறுநர்களிற்கான அடிப்படை ஆவணங்கள் பெறுவதற்கு செலவாகிய ரூபா183 970 நிதி உதவியினை தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினர் (TDA) வழங்கியிருந்தனர்.மேலும் சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தினர் 210 வாசிப்பு கண்ணாடிகளை வழங்கிவைத்ததுடன் மேலதிகமாக பெறப்பட்ட 200 கண்ணாடிகளுக்குரிய கோரிக்கைகளினை அடுத்த வாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.நடமாடும் சேவைக்காக தற்காலிக 50 அடி பந்தலினை அருணா பந்தல் சேவை உரிமையாளர் திரு பாலமயூறன் அவர்கள் வழங்கிவைத்தார். மேலும் 10 அடி நீளமுள்ள 15 பந்தல்களினை தொழிற்துறைத் திணைக்களம், வடக்கு மாகாணமும் மேலதிகமாக தேவைபட்ட மேசைகள் மற்றும் கதிரைகளை சாவகச்சேரி கலாசார மண்டபத்தினர் வழங்கிவைத்தனர் .நடமாடும் சேவைக்கான ஆயத்தப்பணிகளுக்கான உபசரணை மற்றும் சிற்றுண்டிகளை பெற்றுக்கொள்வதற்கான நிதி அனுசரணையிற்காக யாழி மதுபானசாலை ரூபா 30000 இனையும் , துரை மதுபானசாலை ரூபா 20000 இனையும் VPN Super Market ரூபா 10000 இனையும் வழங்கியுள்ளனர். மேலும் தினேஸ் வெதுப்பகத்தினால் 100 சோடி பணிஸ் வழங்கப்பட்டதுடன் எம்மால் வழங்கப்பட்ட பொருட்களினை பயன்படுத்தி 1000 பணிஸ் இனை நாவற்குழி இராணுவ முகாம் இராணுவத்தினர் தயார் செய்து வழங்கிவைத்தனர்.நடமாடும் சேவையில் பரிமாறுவதற்கான இலைக்கஞ்சியினை அல்லாரை மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் தயாரித்து வழங்கினர்.மதிய உணவின் ஒரு பகுதியினை மறவன்புலவு திருஞானசம்பந்தர் குடும்பத்தினரும் மேலும் ஒரு பகுதியினை சுட்டிபுரம் கண்ணகை அம்மன் ஆலயத்தினரும் தயாரித்து வழங்கியதுடன்விருந்தினர்களுக்கான மதிய உணவிற்கான அனுசரனையினை கொடிகாமம் MPCS வழங்கியிருந்தனர்.மதிய உணவினை ஒழுங்ககமைத்து வழங்குவதற்கான இடவசதியினை திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் வழங்கியிருந்தார்.தேசிய அடையாள அட்டைக்குரிய புகைப்படத்தினை பெற்று கொள்ளும் போது செலுத்தவேண்டிய கட்டணத்தினை ரூபா 300 ஆக சாவகச்சேரி குகன் ஸ்டூடியோ நிறுவனத்தினர் (வழமையான கட்ட ணம் ரூபா 400) வழங்கியிருந்தனர்.நடமாடும் சேவைக்கான வாகனத் தரிப்பிடமாக பயன்படுத்த பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள தனது காணியினை திரு ராஜ் அவர்களும் மற்றும் MPCS சாவகச்சேரி ஆகியோர் அனுமதி தந்ததோடு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.அலுவலக சுற்றுபுற துப்பரவாக்கல் கழிவு பொருட்களை வெளியேற்றுவதற்கான ஒழுங்கமைப்பை சாவகச்சேரி நகர சபை வழங்கியிருந்தனர். மேலும் ஒலிபெருக்கி சாதனங்களை மட்டுவில் மத்தி கிராம அபிவிருத்திச்சங்கமும் வாகன உதவிகளை கிராம உத்தியோகத்தர் நிஷாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார் .மேற்குறிப்பிட்ட வகையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய உதவி பிரதேச செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ,கணக்காளர் ,நிர்வாக உத்தியோகத்தர்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் உத்தியோகத்தர்கள் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
























