தென்மராட்சி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்களின் தலைமையில் 12.09.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் எதிர்வரும் காலம் மழை காலம் என்பதனால் நீர் தேங்ககூடிய கொல்கலன்களை உரிய முறையில் அகற்றுதல், விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சிரமதான பணிகளை முன்கூட்டியே மேற்கொள்வதன் மூலம் நாம் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துகொள்ளலாம் எனவும் டெங்கு நோய் தொடர்பாக தொடர்ச்சியான கட்டுப்பாட்டு கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்து இதற்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுகொண்டார்.கிராம சேவையாளர்கள் தலைமையில் கிராம மட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு கூட்டங்களை நடாத்தி அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.கிராம மட்ட உத்தியோகத்தர்கள் அவர்களுடைய கிராம மட்ட பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
சிரேஷ்ட பொதுசுகாதார பரிசோதகர் கருத்து தெரிவிக்கையில்,டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் கிராம அலுவலர் பிரிவுகளாக சவாகச்சேரி, மண்டுவில், நுணாவில் மேற்கு , கைதடி போன்ற பகுதிகள் இனங்காணப்பட்டதாகவும் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக எதிர்வரும் 22,23,24ம் திகதிகளில் கைதடி வடக்கு, கொடிகாமம் தெற்கு, கொடிகாமம் மத்தி நகரப்புரத்தை அண்டிய பிரதேசங்கள் மீசாலை கிழக்கு போன்ற கிராம அலுவலர் பிரிவுகளில் களத்தரிசிப்பு, விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.பிரதிக்கல்வி பணிப்பாளர்(தமிழ்) அவர்கள் டெங்கு கட்டுப்பாடு பற்றிய மாதாந்த அறிக்கை சகல பாடசாலைகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் இதற்கு தாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்
வர முன்னர் காத்துக்கொள்ளும் நடவடிக்கையாக டெங்கு நுளம்பு பரவும் இடங்களில் கூடுதலான கவனம் எடுக்குமாறும் பொதுமக்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தொடர்ச்சியாக பேணி வருமாறும் கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள வெள்ள வாய்க்கால் தொடர்பான விபரங்களினையும் வழங்குமாறும் வெள்ள வாய்க் காலினை சீர்படுத்துவதன் மூலம் வெள்ள அனர்த்தம் மற்றும் டெங்கு நோயிலிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் அவர்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர், சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் நகரசபை,பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
548197174 1987587005428921 4238296433539939789 n

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top