2025.04.16 ஆந் திகதி பிரதேச காணிப்பயன்பாட்டுக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இவ் கூட்டத்தில் பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகு பீடாதிபதி, காணி உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர், காணி பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், காணிக்கிளை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், கைதடி தெற்கு, கைதடி தென்கிழக்கு, இடைக்குறிச்சி, கரம்பகம், மிருசுவில் தெற்கு, நாவற்குழி மேற்கு, கொடிகாமம் வடக்கு, கொடிகாமம் மத்தி ஆகிய பிரிவுகளை சார்ந்த கிராம அலுவலர்கள் பங்குபற்றியிருந்தனர்.















